தமிழக அமைச்சர்களுக்கான இலாகாக்கள் ஒதுக்கீடு : முதலமைச்சர் விஜய் கையில் 17 துறைகள்

த.வெ.க. தலைவர் விஜய் கடந்த 10-ந்தேதி தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்றார். அவருடன் 9 அமைச்சர்களும் பதவியேற்றனர். இருப்பினும் யார் எந்தத் துறையை கவனிக்கப் போகிறார்கள் என்பது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படாமல் இருந்தது.

இந்நிலையில், தமிழக அரசின் அமைச்சர்களுக்கான துறை ஒதுக்கீடு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதில் முதலமைச்சர் விஜய் பல முக்கிய துறைகளை தனது நேரடி கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்.

யார் யார்க்கு என்னென்ன துறை?

அமைச்சர் செங்கோட்டையன் – நிதித்துறை

அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமர் – மின்சாரம், மற்றும் நீதித்துறை

அமைச்சர் கே.ஜி.அருண்ராஜ் – சுகாதாரத்துறை, மருத்துவ கல்வி, குடும்பநலத்துறை

அமைச்சர் ஆனந்த் – ஊரக வளர்ச்சித்துறை, நீர்வளத்துறை

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா – பொதுப்பணித்துறை, விளையாட்டு மேம்பாட்டுத்துறை

அமைச்சர் கீர்த்தனா – தொழில்துறை அமைச்சர் டி.கே.பிரபு – இயற்கை வளத்துறை

அமைச்சர் ராஜ்மோகன் – பள்ளிக்கல்வித்துறை, தமிழ்வளர்ச்சி, தகவல் மற்றும் விளம்பரத்துறை

அமைச்சர் வெங்கராமன் – உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை

முதலமைச்சர் விஜய் கையில் உள்ள துறைகள்

முதலமைச்சர் ஜோசப் விஜய் கட்டுப்பாட்டின் கீழ் 17 துறைகள் வருகின்றன. அதாவது, பொது, பொது நிர்வாகம், இந்திய ஆட்சிப் பணி, இந்திய காவல் பணி, இந்திய வனப் பணி, மாவட்ட வருவாய் அலுவலர்கள், காவல் துறை, உள்துறை, சிறப்புத் திட்ட செயலாக்கம், மகளிர் நலன், இளைஞர் நலன், குழந்தைகள் நலன், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலன், நகராட்சி நிர்வாகம், நகர்ப்புறம் மற்றும் குடிநீர் வழங்கல் என 17 துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

Related Post

Latest News