வைகோ இல்லத்தில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய்

சென்னை அண்ணா நகரில் உள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இல்லத்திற்கு முதல்வர் ஜோசப் விஜய் இன்று வருகைப்புரிந்தார்.

வைகோவின் மகன் துரை வைகோ, வீட்டு வாசலுக்கு வந்து விஜய்க்கு மாலை அணிவித்து, பொன்னாடை போர்த்தி வரவேற்றார். முதல்வராக பதவியேற்றதற்கு வைகோவிடம் வாழ்த்துகளையும் பெற்றார்.

முன்னதாக சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் இல்லத்திற்கு முதல்வர் விஜய் சென்று வாழ்த்து பெற்றார்.

Related Post

Latest News