இந்தித் திரையுலகில் அறிமுகமாகும் தமிழ் விளம்பர பட நடிகை

தமிழ் விளம்பர படங்களில் தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த நிவாஷினி கிருஷ்ணன், தற்போது, கிருஷ்ணவதார் படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமாகிறார்.

மே 7-ம் தேதி வெளியாகவுள்ள கிருஷ்ணவதார் பாகம் 1-ல், நிவாஷினி, கடவுள் கிருஷ்ணனுக்கு ஜோடியாக புரானப் பாத்திரமான ருக்மிணி வேடத்தில் நடித்துள்ளார். Creativeland studios Entertainment மற்றும் Athasrikatha Motion pictures நிறுவனத்தும் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை இயக்குனர் ஹர்திக் குஜ்ஜர் இயக்கியுள்ளார்.

தமிழ்நாட்டின் பரமக்குடியை பூர்வீகமாகக் கொண்ட நிவாஷினி, சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்தவர். பின்னர் லண்டனில் உள்ள புகழ்பெற்ற கோல்ட்ஸ்மித்ஸ் பல்கலைக்கழகத்தில் பேஷன் மீடியா துறையில் உயர் படிப்பை முடித்தவர்.

பல்வேறு டிவி தொடர்களில் நடித்து, தனது யதார்த்த நடிப்பால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நிவாஷினி, விஷ்ணு விஷாலுடன் இணைந்து ஓஹோ என்தன் பேபி படத்தில் நடித்து தமிழ் திரையுலகிலும் இடம் பிடித்தார். மேலும், சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பதிவேற்றும் இவரது புகைப்படத்தைக் காண, இலட்சக்கணக்கானோர் இவரை பின்தொடர்கின்றனர்.

கிருஷ்ணவதாரின் படத்தின் மூலம் தற்போது முழு இந்திய சினிமாவிலும் தடம்பதிக்கிறார் நிவாஷினி. இப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் என நான்கு மொழிகளிலும் வெளியாகிறது, இது அவரது திரையுலக வாழ்க்கையில் முக்கிய மைல்கல்லாக அமையும்.

இந்தப் பெரிய திரையில் ருக்மிணி வேடத்தை உயிர்ப்பிக்கும் நிவாஷினி கிருஷ்ணன் மீது அனைவரின் கண்களும் பதிந்துள்ளன.

Latest News