‘விஜய்க்கு ஆதரவு.. ஆனால் கூட்டணி திமுகவோடுதான்’ – கம்யூனிஸ்ட் கட்சிகள் பேட்டி

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருந்த தவெக ஆட்சியமைக்க உரிமை கோரியிருந்த நிலையில், 118 எம்.எல்.ஏ.க்கள் பெயர் பட்டியலை கொண்டு வந்தால்தான் ஆட்சி அமைக்க அனுமதிக்க முடியும் என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.

இந்த சூழலில் தவெக அரசுக்கு காங்கிரஸ் ஏற்கனவே ஆதரவு தெரிவித்திருந்த நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கள் ஆதரவு அளித்தது.

இதையடுத்து, இரண்டு கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களும் சேர்ந்து செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் பேசியதாவது : “தவெக ஆட்சி அமைக்க நாங்கள் வெளியில் இருந்து ஆதரவு மட்டுமே தருகிறோம். இது கூட்டணி அல்ல. மக்கள் நலன் சார்ந்த பிரச்னைகளில் திமுக மற்றும் தோழமை கட்சிகளுடன் இணைந்து பயணிப்போம் என கூறியுள்ளனர்.

Related Post

Latest News