தமிழகத்தில் காலியாக உள்ள 5 சட்டசபைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியிடுவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாகத் தடை விதித்துள்ளது.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தமிழக முதல்வர் விஜய் திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர், விஜய் தனது திருச்சி கிழக்கு தொகுதி பதவியை ராஜினாமா செய்தார்.
மறுபுறம், அதிமுக-வைச் சேர்ந்த முக்கிய எம்.எல்.ஏ-க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இதனால், திருச்சி கிழக்கு, பெருந்துறை, அம்பாசமுத்திரம், விராலிமலை, கரூர் ஆகிய 5 தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டது.
இந்த சூழலில், இடைத்தேர்தல் நடத்த தடை விதிக்க உத்தரவிட வேண்டும் எனக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தேர்தல் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளதால் தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை விசாரித்த தலைமை நீதிபதி தர்மாதிகாரி, நீதிபதி அருள்முருகன் ஆகியோர் கொண்ட பெஞ்ச், 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை விதித்தனர்.
