முதலமைச்சரின் தொகுதியிலேயே ரேஷன் அரிசி கடத்தலா? – பெரம்பூரில் பரபரப்பு

முதலமைச்சர் ஜோசப் விஜயின் பெரம்பூர் தொகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சமூக வலைதளங்களில் பரவும் வீடியோக்கள் குறித்து அதிகாரப்பூர்வ விசாரணை நடத்த கோரிக்கை எழுந்துள்ளது.

சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்ற முதலமைச்சர் ஜோசப் விஜய், பின்னர் திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்து பெரம்பூர் தொகுதியின் உறுப்பினராக செயல்பட்டு வருகிறார்.

அண்மையில் பெரம்பூரில் புதிய நியாயவிலைக் கடைகளை திறந்து வைத்தார். இதையடுத்து ரேஷன் கடைக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அரிசி, சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை பொதுமக்களுக்கு வழங்கினார்.

இந்த சூழலில், பெரம்பூரில் உள்ள ஒரு ரேஷன் கடையில் இருந்து ரேஷன் அரிசி மூட்டைகள் வெளியே கொண்டு செல்லப்படும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Related Post

Latest News