வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு செந்தில் பாலாஜிக்கு அனுமதி மறுப்பு

தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த மாதம் (ஏப்ரல்) 23-ந் தேதி ஒரே கட்டமாக நடந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணியில் இருந்து எண்ணப்பட்டு வருகின்றன.

முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கோவை அரசினர் தொழில்நுட்பக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி மற்றும் அவருடன் வந்த ஆதரவர்கள் என அனைவரும் மஞ்சள் துண்டு அணிந்து வந்ததால், வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் செல்ல அதிகாரிகள் அனுமதி மறுத்தனர்.

பின்னர், மஞ்சள் துண்டை அகற்றிய பிறகே வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Related Post

Latest News