த.வெ.க. தலைவர் விஜய் நேற்று தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். விஜய்யுடன் 9 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர்.
இன்று விஜய் தலைமையில் புதிய அரசு அமைந்துள்ள நிலையில், தமிழகத்தின் 17-வது சட்டசபையின் முதல் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முதல் நபராக விஜய் பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக பொறுப்பேற்றுக்கொண்டார். அதனை தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் எம்.எல்.ஏ.வாக பொறுப்பேற்றுக்கொண்டனர்.
விஜய் தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்ற மூத்த அரசியல்வாதியான செங்கோட்டையன் முன்பு அ.தி.மு.க.வில் பயணித்தவர். அவர் இன்று சட்டைப்பையில் ஜெயலலிதா புகைப்படத்துடன் செங்கோட்டையன் எம்.எல்.ஏ.வாக பதவியேற்றுக்கொண்டார். நேற்று அமைச்சராக பதவியேற்றபோதும் செங்கோட்டையன் ஜெயலலிதா படத்தை வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
