மின்சார வாரியத்திற்கு ரூ.2,47,130 கோடி கடன் : தமிழகத்தில் மின்கட்டணம் உயர்கிறதா?

கடந்த 16-ந் தேதி, தமிழ்நாட்டின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிடப்பட்டது. நிதி அமைச்சர் மரிய வில்சன் வெளியிட்ட இந்த வெள்ளை அறிக்கையில், தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த கடன் ரூ.13 லட்சத்து 18 ஆயிரம் கோடி என்று கூறப்பட்டது. குறிப்பாக, மின் துறையின் மொத்த நிலுவைக் கடன் மட்டும் ரூ.2 லட்சத்து 47 ஆயிரத்து 130 கோடி என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

தமிழகத்தில் மின்கட்டணம் உயர்கிறதா?

மின்துறை தொடர்பான வெள்ளை அறிக்கையை வெளியிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல் குமார், “தமிழகத்தில் இந்த ஆண்டு மின் கட்டண உயர்வு என்ற பேச்சிற்கே இடமில்லை. அனைத்து நுகர்வோர்களுக்கும் பழைய கட்டண முறையே தொடரும்” எனத் தெளிவுபடுத்தினார்.

கடந்த காலங்களில் மின்சார வாரியத்தில் செலவினங்கள் கணிசமாக இருந்தபோதிலும், அதற்கேற்ற வருவாய் கிடைத்த போதிலும், அதன் உண்மையான பலன்கள் எதுவும் பொதுமக்களுக்குச் சென்று சேரவில்லை என்பதை இந்த வெள்ளை அறிக்கை சுட்டிக்காட்டுவதாக அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு த.வெ.க. அரசு பொறுப்பேற்காமல் இருந்திருந்தால், மின்சார வாரியம் முழுமையாகத் தனியார் வசம் சென்றிருக்கும் என்றார். மேலும், மின் வாரியத்தில் புதிய பணியாளர்கள் யாரும் முறையாகத் தேர்வு செய்யப்படாததே நிர்வாகச் சீர்கேட்டிற்குக் காரணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Related Post

Latest News