பிரபல இயக்குனரும் நடிகருமான பாக்யராஜ் காலமானார்

தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த திரைக்கதை மன்னனும், முன்னணி இயக்குநருமான கே. பாக்யராஜ் (73) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் காலமானார். அவரது இந்த திடீர் மறைவு ஒட்டுமொத்த தமிழ் திரையுலகையும், கோடிக்கணக்கான ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.

கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த கே. பாக்யராஜ், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்களும், உலகெங்கிலும் உள்ள தமிழ் ரசிகர்களும் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். கே. பாக்யராஜ் அவர்கள் தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளை நிறைவு செய்ததையொட்டி, அண்மையில் தமிழக அரசு மற்றும் ஒட்டுமொத்தத் திரையுலகமும் இணைந்து அவருக்குப் பாராட்டு விழா நடத்தி கௌரவித்தது குறிப்பிடத்தக்கது.

கே. பாக்யராஜ் வாங்கிய முக்கிய விருதுகள்

பிலிம்பேர் சிறந்த நடிகர் விருது (Filmfare Award for Best Actor – Tamil), தமிழ்நாடு மாநிலத் திரைப்பட விருது, தென்னிந்திய சர்வதேசத் திரைப்பட விருதுகள், சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகள் உள்ளிட்ட விருதுகளை வாங்கியுள்ளார்.

கே. பாக்யராஜ் இயக்கிய முக்கிய திரைப்படங்கள்

சுவர் இல்லாத சித்திரங்கள் (1979), ஒரு கை ஓசை, மௌன கீதங்கள், இன்று போய் நாளை வா, அந்த 7 நாட்கள், தூறல் நின்று போச்சு, முந்தானை முடிச்சு உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கியுள்ளார்.

Related Post

Latest News