‘பல்ஸ்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு

நடிகர் விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் இணைந்து நடித்திருந்த மகேந்திரனின் சர்வைவல் த்ரில்லர் திரைப்படம் ‘பல்ஸ்’.

குளோபல் பிக்சர்ஸ் நிறுவனத்தின் அழகர்ராஜ் ஜெயபாலன் தயாரிப்பில், ‘எக்கோ’ திரைப்படத்தை இயக்கியிருந்த நவீன் கணேஷ் இதனை எழுதி இயக்கியுள்ளார்.

படத்தில் மாஸ்டர் மகேந்திரனுக்கு ஜோடியாக புதுமுக நடிகையான ரிஷிகா ராஜ்வீர் நடித்துள்ளார். மூத்த இயக்குநர் ஆர்.வி. உதயகுமார், லிவிங்ஸ்டன், கும்கி அஷ்வின், கூல் சுரேஷ், KPY சேது மற்றும் சரத் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இந்நிலையில், ‘பல்ஸ்’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இப்படம் வருகின்ற ஏப்ரல் 24ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Post

Latest News