ஓட்டுக்குப் பணம் கேட்டு கோவையில் பொதுமக்கள் சாலை மறியல்

கோயம்புத்தூர் மாவட்டம் கோட்டூர் கிராமத்தில், தேர்தல் நேரத்தில் சில வீடுகளுக்கு மட்டும் பணம் வழங்கப்பட்டதாகக் கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். “எங்களுக்கும் பணம் தர வேண்டும்” என்ற கோரிக்கையுடன் நடந்த இந்த போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தேர்தல் காலத்தில் வாக்காளர்களுக்கு பணம் வழங்குவது சட்டப்படி குற்றமாகக் கருதப்படும் நிலையில், அதே பணம் கிடைக்கவில்லை என்பதற்காக மக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் கோயம்புத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூரில் இருந்து சுமார் 40 கி.மீ தொலைவில் உள்ள கோட்டூர் கிராமத்தில் இந்த சம்பவம் நடைபெற்றது. ஏப்ரல் 23-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், “அக்கம் பக்கத்து வீடுகளுக்கு பணம் கொடுத்துவிட்டு எங்களை மட்டும் ஏன் தவிர்க்க வேண்டும்? எங்களுக்கும் சமமாக பணம் வழங்க வேண்டும்.” என போராட்டம் நடத்தியுள்ளனர்.

Latest News