திருநெல்வேலி மின்பகிர்மான வட்டத்திற்குட்பட்ட தென்காசி மற்றும் சங்கரன்கோவில் கோட்டங்களில் மாதாந்திர மின்வாரிய பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், நாளை (மே 19, செவ்வாய்க்கிழமை) பல பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்காசியில் மின்தடை செய்யப்படும் பகுதிகள்
கீழப்பாவூர் மற்றும் அச்சன்புதூர் துணைமின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், பாவூர்சத்திரம், கீழப்பாவூர், மேலப்பாவூர், குலசேகரப்பட்டி, குறும்பலாப்பேரி, நாட்டார்பட்டி, ஆவுடையானூர், வெய்காலிப்பட்டி, சின்னநாடானூர், திப்பணம்பட்டி, செட்டியூர், பெத்தநாடார்பட்டி, கரிசலூர், செல்லத்தாயார்புரம், மகிழ்வண்ணநாதபுரம், அடைக்கலப்பட்டினம் வடக்கு, சாலைப்புதூர், வடகரை, அச்சன்புதூர், நெடுவயல், வாவாநகரம், காசிதர்மம், பண்பொழி, மேக்கரை மற்றும் கரிசல் குடியிருப்பு ஆகிய பகுதிகள்.
சங்கரன்கோவிலில் மின்தடை செய்யப்படும் பகுதிகள்
கரிவலம்வந்தநல்லூர் துணைமின் நிலையத்தில் நடைபெறும் பராமரிப்பு பணிகளின் காரணமாக கரிவலம்வந்தநல்லூர், பனையூர், குவளைக்கண்ணி, கோமதிமுத்துபுரம், இடையான்குளம், துரைச்சாமியாபுரம், எட்டிச்சேரி, சென்னிகுளம், லெட்சுமியாபுரம், காரிசாத்தான், செவல்பட்டி, சுப்பிரமணியபுரம் ஆகிய பகுதிகள்
