சென்னையில் கொளத்தூரில் ஏற்பட்ட தொடர் மின்வெட்டு காரணமாக ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலையில் இறங்கி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னையில், கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த சூழலில், சென்னை கொளத்தூர், ராஜ்மங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட 200 அடி சாலைப் பகுதிகளில் நேற்று இரவு 8 மணி முதல் அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. இந்த மின்வெட்டால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
இதனால் ஆத்திரமடைந்த பெண்கள், குழந்தைகள் என சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் நள்ளிரவில் திடீரென சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவசர அவசரமாக மின்சாரப் பிரச்சனை சரிசெய்யப்பட்டு நள்ளிரவு 2:30 மணியளவில் சாலையில் மறியலில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
