தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவு ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு மே 4ம் தேதி முடிவுகள் வெளியாகிறது.
தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தவுடன், உடனடியாக Exit Poll முடிவுகள் வெளியாகும் என பலர் எதிர்பார்த்தனர். ஆனால், இந்திய தேர்தல் ஆணையம் விதித்திருந்த கட்டுப்பாடுகள் காரணமாக, எந்தவித கருத்துக் கணிப்புகளும் வெளியிடப்படவில்லை.
தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, ஏப்ரல் 9ஆம் தேதி காலை 7 மணி முதல் ஏப்ரல் 29ஆம் தேதி மாலை 6.30 மணி வரை தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை வெளியிடத் தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று மேற்குவங்க மாநிலத்தில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு நிறைவடைந்த பின், மாலை 6.30 மணிக்குப் பிறகு Exit Poll முடிவுகள் வெளியாகத் தொடங்கும். இதனை முன்னிட்டு, அரசியல் வட்டாரங்கள் மட்டுமல்லாமல், பொதுமக்களிடமும் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.


