தமிழக காவல்துறையில் பல முக்கிய அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பலர் புதிய பொறுப்புகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். சில அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலிலும் வைக்கப்பட்டுள்ளனர்.
காத்திருப்போர் பட்டியலில் இருந்த செந்தில் குமாரி, சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து பிரிவு ஐஜியாக மாற்றம்.
ஊழல் தடுப்பு கண்காணிப்பு துறை எஸ்பி டோங்கரே பிரவின் உமேஷ், திருச்சி மாவட்ட எஸ்பியாக மாற்றம்.
திருப்பத்தூர் மாவட்ட எஸ்பி சியாமளா தேவி, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத்தடுப்பு பிரிவு எஸ்பியாக மாற்றம்.
கோவை நகர போக்குவரத்து துணை ஆணையராக இருந்த அசோக் குமார், தென்காசி மாவட்ட எஸ்பியாக மாற்றம்.
ஓசூர் சப்டிவிசன் ஏஸ்பி அக்சய் அனில் வக்காரே பதவி உயர்வு பெற்று திருப்பத்தூர் மாவட்ட எஸ்பியாக மாற்றம்.
நாகர்கோவில் சப்டிவிசன் ஏஎஸ்பி லலித் குமார் பதவி உயர்வு பெற்று பெரம்பலூர் மாவட்ட எஸ்பியாக மாற்றம்.
திருச்சி மாவட்ட எஸ்பியாக இருந்த செல்வநாக ரத்தினம், பெரம்பலூர் மாவட்ட எஸ்பியாக இருந்த பிரபாகர் ஆகியோர் மாற்றப்பட்டு எந்த பொறுப்பும் வழங்கப்படவில்லை.
