வீட்டிலிருந்து வேலை செய்யுங்கள், வெளிநாட்டுப் பயணங்களைத் தவிருங்கள் : பிரதமர் மோடி வேண்டுகோள்

மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் போர் பதற்றம் காரணமாக உலக நாடுகளின் பொருளாதாரத்தை பாதித்து வருகிறது. இந்த சூழலில் மக்கள் தங்களின் அன்றாட வாழ்க்கை முறையிலேயே சில மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

ஐதராபாத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், பெட்ரோல் மற்றும் டீசல் பயன்பாட்டை குறைக்கவேண்டும். மெட்ரோ ரயில் சேவை உள்ள இடங்களில் அதைப் பயன்படுத்த வேண்டும். ஒரே இடத்துக்கு செல்லும் மக்கள் கார் பயணத்தை தவிர்த்து பொது போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.

இதையும் படிங்க : மேடையிலேயே த.வெ.க. நிர்வாகிகளை எச்சரித்த முதல்வர் விஜய்

கொரோனா காலத்தில் மக்கள் பழகிய “வொர்க் ஃப்ரம் ஹோம்”, ஆன்லைன் கூட்டங்கள், வீடியோ கான்பரன்ஸ் போன்ற நடைமுறைகளை மீண்டும் அதிகப்படியாக பயன்படுத்த வேண்டிய நேரம் இது என்றும் பிரதமர் கூறினார். தேவையற்ற வெளிநாட்டு பயணங்களை தவிர்க்கலாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

பண்டிகை காலங்களில் அதிக அளவில் தங்கம் வாங்கும் பழக்கத்தையும் தற்காலிகமாக குறைக்க வேண்டும் என்று கூறிய அவர், “நாட்டின் அந்நியச் செலாவணியை பாதுகாப்பது இப்போது முக்கியமானது” என்றார்.

சமையல் எண்ணெய் பயன்பாட்டை குறைப்பது உடல்நலத்துக்கும் நல்லது. நாட்டிற்கும் பயனுள்ளதாக இருக்கும். இயற்கை விவசாயத்தை ஊக்குவித்து, வேதியியல் உரங்களின் பயன்பாட்டை குறைக்க வேண்டியது அவசியம்.

நாம் தினமும் பயன்படுத்தும் பொருட்களில் எவை வெளிநாட்டில் தயாரிக்கப்படுகின்றன என்பதை மக்கள் கவனிக்க வேண்டும். உடனே அவற்றை தூக்கி எறிய வேண்டிய அவசியமில்லை. ஆனால் இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களை முன்னுரிமை கொடுக்கும் மனப்பாங்கு உருவாக வேண்டும்,” என்று அவர் தெரிவித்தார்.

Related Post

Latest News