பயணிகளே கவனம்.. இனி மெட்ரோவில் பழைய பயண அட்டை செல்லாது..!

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் பழைய பயண அட்டையை நிறுத்தி, “சிங்கார சென்னை அட்டை”க்கு முழுமையாக மாற்றம் செய்ய திட்டமிட்டுள்ளது. பழைய அட்டையில் உள்ள மீதத் தொகையை மாற்றிக்கொள்ள பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில் மெட்ரோ இரயில் சேவை தொடங்கப்பட்டது. இதில் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகளுக்கு பயணித்து வருகின்றனர். இதன் டிக்கெட் முறையில் தற்போது பெரிய மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மெட்ரோ நிர்வாகம் வெளியிட்ட தகவலின் படி, தற்போதுள்ள சென்னை மெட்ரோ பயண அட்டை (Travel Card) பயன்பாடு விரைவில் முழுமையாக நிறுத்தப்பட உள்ளது. அதற்குப் பதிலாக “சிங்கார சென்னை அட்டை” மட்டும் பயன்படுத்தப்படும். இந்த புதிய மாற்றம் 2026 மே 1 முதல் முழுமையாக நடைமுறைக்கு வர திட்டமிடப்பட்டுள்ளது.

பயணிகள் தங்கள் பழைய மெட்ரோ பயண அட்டையில் உள்ள மீதித் தொகையை இழக்காமல் மாற்றிக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Latest News