அதிமுகவைச் சேர்ந்த மூத்த நிர்வாகியும், கரூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து கரூர் சட்டமன்றத் தொகுதி காலியானதாக சட்டசபை செயலகம் முறைப்படி அறிவித்துள்ளது.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு தமிழக அரசியல் வட்டாரத்தில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் நடந்து வருகிறது. நேற்று காலை கரூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ எம்.ஆர்.விஜயபாஸ்கர் சென்னை தலைமைச் செயலகத்திற்கு வருகை தந்தார். அங்கு அவர் சட்டப்பேரவை சபாநாயகர் பிரபாகரை நேரில் சந்தித்து, தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை வழங்கினார். இந்த திடீர் ராஜினாமா கரூர் மாவட்ட அதிமுகவினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து, கரூர் சட்டமன்றத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக, தமிழக சட்டமன்றத்தில் காலியாக உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே காலியாக இருந்த 6 தொகுதிகளுடன் தற்போது கரூரும் இணைந்துள்ளது.
தற்போது காலியாக உள்ள தொகுதிகளின் முழு விவரம்:
திருச்சி கிழக்கு
மதுராந்தகம்
தாராபுரம்
பெருந்துறை
அம்பாசமுத்திரம்
விராலிமலை
கரூர்
