Nooru Saami Box office Collection : ‘நூறு சாமி’ படத்தின் 12 நாள் வசூல் எவ்வளவு?

இயக்குநர் சசியின் இயக்கத்தில் கடந்த ஜூன் மாதம் வெளியான திரைப்படம் ‘நூறு சாமி’. இப்படத்தில், விஜய் ஆண்டனி, ஸ்வாசிகா, இயக்குநர் பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான இத்திரைப்படம், ரசிகர்களிடையேவும் விமர்சகர்களிடையேவும் மிகப்பெரிய அளவில் பாசிட்டிவ் விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

இப்படம் வெளியாகி 12 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், அதன், பாக்ஸ் ஆபீஸ் வசூல் குறித்த விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. அதன்படி, ‘நூறு சாமி’ திரைப்படம் கடந்த 12 நாட்களில் உலகளவில் ரூபாய் 16 கோடி வசூல் செய்து பாக்ஸ் ஆபீஸில் சாதனை படைத்துள்ளது.

Related Post

Latest News