தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடைபெறுவதாக செய்திகள் வெளியான நிலையில் தற்போது செல்வபெருந்தகை வீட்டில் சோதனை நடைபெறவில்லை என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியது போல் அவரது வீடு உள்ளிட்ட எங்கும் சோதனை நடத்தவில்லை என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
ராகுல் காந்தியின் பிரச்சாரத்திற்கு செல்லவிடாமல் தடுத்ததாக செல்வப்பெருந்தகை கூறுவதும் உண்மையில்லை என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.


