தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவு ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு மே 4ம் தேதி முடிவுகள் வெளியாகிறது.
இந்நிலையில், மே 2 முதல் மறு உத்தரவு வரும் வரை காவலர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை யாரும் விடுமுறை எடுக்கக் கூடாது என தமிழ்நாடு டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.
மருத்துவ விடுப்பு, மகப்பேறு விடுப்பு, குழந்தை பராமரிப்பு விடுப்பு, கல்வி விடுப்பு என முறையான காரணங்களுக்காக விடுப்பில் இருப்பவர்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படுகிறது.


