மேற்கு வங்காளத்தில் நடைபெற்ற வாக்குபதிவில் புதிய சாதனை

மேற்கு வங்காள மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 93% வாக்குப்பதிவு பதிவு செய்யப்பட்டு வரலாற்று சாதனை படைத்துள்ளது.

294 தொகுதிகள் கொண்ட மேற்கு வங்க மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. முதற்கட்டமாக 152 தொகுதிகளில் ஏப்ரல் 23ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. மீதமுள்ள 142 தொகுதிகளுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

இரண்டு கட்டங்களாக நடைபெற்ற இந்த தேர்தலில் வரலாறு காணாத வகையில் 93.19 சதவீத வாக்குகள் பதிவானது. இந்த அளவுக்கு அதிகமான வாக்குப்பதிவு, மேற்கு வங்காளத்தில் சுதந்திரத்திற்குப் பிறகு பதிவான மிக உயர்ந்த வாக்கு சதவீதமாகும்.

Latest News