ரெயில் டிக்கெட் முன்பதிவை எளிமையாகவும், வேகமாகவும் மாற்றும் நோக்கில் IRCTC தனது புதிய பீட்டா இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய வடிவமைப்பில் தேவையற்ற பாப்-அப், அதிகப்படியான கேப்ட்சா போன்றவை குறைக்கப்பட்டுள்ளதால், குறிப்பாக தட்கல் டிக்கெட் முன்பதிவின் போது இது வசதியாக இருக்கும்.
புதிய இணையதளத்தில் ரெயில் டிக்கெட் பதிவு செய்வது எப்படி?
புதிய IRCTC இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்வது மிகவும் எளிமையானதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
படி 1: IRCTC-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உங்களது பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி உள்நுழையுங்கள்.
படி 2: புறப்படும் நிலையம், செல்லும் நிலையம், பயண தேதி மற்றும் பயண வகுப்பை தேர்வு செய்து ரெயில்களைத் தேடுங்கள்.
படி 3: உங்களுக்கு ஏற்ற ரெயிலைத் தேர்வு செய்து, பயணிகளின் பெயர், வயது, பாலினம் உள்ளிட்ட விவரங்களை உள்ளிடுங்கள். தேவையெனில் முன்பே சேமித்திருந்த பயணிகள் விவரங்களையும் பயன்படுத்தலாம்.
படி 4: இருக்கை கிடைப்பை சரிபார்த்து, விருப்பமான முன்பதிவு விவரங்களை உறுதி செய்யுங்கள்.
படி 5: UPI, நெட் பேங்கிங், டெபிட்/கிரெடிட் கார்டு அல்லது பிற டிஜிட்டல் கட்டண முறைகள் மூலம் பணம் செலுத்தி டிக்கெட்டை உறுதி செய்யுங்கள். வெற்றிகரமாக பதிவு செய்யப்பட்டதும் மின்னணு டிக்கெட் (e-Ticket) உடனடியாக கிடைக்கும்.
தட்கல் பயணிகளுக்கு என்ன பயன்?
தட்கல் டிக்கெட் முன்பதிவின் போது இணையதளம் மெதுவாக இயங்குவது, Captcha சிக்கல்கள் மற்றும் அதிக நெரிசல் போன்ற புகார்கள் நீண்ட காலமாக இருந்து வந்தன. புதிய இணையதளம் இந்த சிக்கல்களை குறைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையிலான பயனர்கள் டிக்கெட் முன்பதிவு செய்யும்போதும் இணையதளம் வேகமாக செயல்படும்.
