கடந்த மே 3-ஆம் தேதி நாடு முழுவதும் நீட் தேர்வு நடத்தப்பட்டது. ஆனால் வினாத்தாள் கசிந்ததாக குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து, அந்தத் தேர்வு ரத்து செய்யப்பட்டது.
தேர்வு நடைபெற்ற சில மணி நேரங்களிலேயே, டெலிகிராம் செயலியில் நீட் மறுதேர்வுக்கான வினாத்தாள் முன்கூட்டியே கசிந்துவிட்டதாகக் கூறி ஒரு வீடியோ வெளியாகி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, கடந்த ஜூன் 21-ஆம் தேதி நாடு முழுவதும் மறுதேர்வை நடத்தபட்டது.
ஜூன் 21-ஆம் தேதி நடைபெற்ற மறுதேர்வு, இதற்கு முன் இல்லாத அளவிலான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நடத்தப்பட்டது. நாடு முழுவதும் 5,440 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற்றது. இந்த மறுதேர்வு முடிவுகள் ஜூலை 20-க்குள் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
