இன்று வெளியாகிறது நீட் தேர்வு ஹால் டிக்கெட் : எப்படி டவுன்லோடு செய்யலாம்?

மே 3 ஆம் தேதி நடைபெறும் நீட் தேர்விற்கான ஹால் டிக்கெட் இன்று (ஏப்ரல் 26) வெளியிடப்படுகிறது. மாணவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டிற்கான நீட் (NEET) தேர்வு மே 3 ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற உள்ளது. இந்தத் தேர்வை, சுமார் 28 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர். இதில் தமிழகத்தில் மட்டும் சுமார் 2 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுத தயாராக உள்ளனர்.

தமிழகத்​தில் சென்​னை, செங்​கல்​பட்​டு, திரு​வள்​ளூர், திருச்​சி, மதுரை, கோவை என 30 நகரங்​கள் உட்பட நாடு முழு​வதும் 552 நகரங்​களில் தேர்வு நடை​பெறும்.

தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று (ஏப்ரல் 26) வெளியிடப்படுகிறது. மாணவர்கள் neet.nta.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தங்களது ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

Latest News