பாறையில் கால்நீட்டிப்படுத்து ஆய்வு செய்த அமைச்சர் ராஜ்மோகன்

மதுரை மாவட்டத்திற்கு நேற்று வந்த அமைச்சர் ராஜ்மோகன், சங்க கால வரலாற்றுச் சின்னங்களாக கருதப்படும் மாங்குளம் தமிழ் பிராமி கல்வெட்டுகள் மற்றும் சமணர் படுகையை நேரில் பார்வையிட்டார். அங்கு அமைக்கப்பட்டுள்ள கற்படுக்கைகள் குறித்து தொல்லியல் அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டறிந்தார்.

இதையடுத்து, அமைச்சர் ராஜ்மோகன் அங்குள்ள பாறையில் கால்நீட்டிப்படுத்து ஆய்வு செய்தார். பின்னர் சமணர் படுக்கைகளை உலகத்தரம் வாய்ந்த சுற்றுலாத்தலமாக மாற்ற தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு தொல்லியல் அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார்.

தமிழகத்தின் தொன்மையான, சங்க காலப் பாண்டிய மன்னர்களின் வரலாற்றைப் பறைசாற்றும் மாங்குளம் தமிழ் பிராமி கல்வெட்டுகள் வரலாற்றுப் பொக்கிஷமாகும். இங்கு சுற்றுலா பயணிகளுக்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், வழிகாட்டிப் பலகைகளை டிஜிட்டல் முறையில் அமைக்கவும் தொல்லியல், சுற்றுலாத் துறைகளுக்கு அறிவுறுத்தியுள்ளோம் என கூறியுள்ளார்.

இந்த ஆய்வுப் பயணத்தில் தொல்லியல் துறை இயக்குநர் ஜெயசீலன், இணை இயக்குநர் பயதீஸ் குமார், மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் குமார் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கார்த்திகேயன், கருப்பையா உள்ளிட்டோர் அமைச்சருடன் கலந்து கொண்டனர்.

Related Post

Latest News