திமுக கூட்டணியில் இருந்து விலகியது மதிமுக! பொதுக்குழுவில் அதிரடி முடிவு

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அரசியல் களத்தில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக அதிமுக வில் இருக்கும் நிர்வாகிகள் கூண்டோடு தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர்.

இந்த சூழலில், திமுக கூட்டணியில் இருக்கக்கூடிய முக்கிய கட்சியாக பார்க்கப்படும் மதிமுகவும் தவெகவில் இணைய உள்ளதாக செய்திகள் வெளியாகி வந்தன. இந்நிலையில், திமுக தலைமையிலான கூட்டணியில் இருந்து வைகோ தலைமையிலான மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக) அதிகாரப்பூர்வமாக விலகியுள்ளது.

மதிமுக, திடீரென திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Related Post

Latest News