2031 ஆம் ஆண்டுக்குள் செவ்வாய் கிரகத்திலிருந்து சுமார் 500 கிராம் மண் மாதிரியை பூமிக்கு கொண்டு வர சீனா புது முயற்சி எடுத்துள்ளது.
சீனாவின் Tianwen-3 விண்கலம் 2028 ஆம் ஆண்டில் செவ்வாய் நோக்கி ஏவப்பட உள்ளது. அதன் முக்கிய நோக்கம் செவ்வாய் மண்ணை சேகரித்து பூமிக்கு கொண்டு வந்து ஆய்வு செய்வதாகும்.
2031-இல் இந்த மாதிரிகள் பூமியை அடைந்தால், செவ்வாய் குறித்து இதுவரை இல்லாத அளவிலான புதிய அறிவியல் தகவல்கள் கிடைக்கும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.


