தமிழக காங்கிரஸ் புதிய தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதி எம்பி மாணிக்கம் தாகூரை நியமித்து அகில இந்திய காங்கிரஸ் தலைமை அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

இதுவரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக செல்வப்பெருந்தகை செயல்பட்டு வந்தார். இந்த நிலையில், அவருக்குப் பதிலாக தற்போது மாணிக்கம் தாகூரை புதிய தலைவராக நியமித்து கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் அதிகாரப்பூர்வ உத்தரவை வெளியிட்டுள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாகத் திமுக கூட்டணியில் நீடித்துவந்த காங்கிரஸ் கட்சி, தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிரடியாகத் தனது அரசியல் நிலப்பாட்டை மாற்றிக்கொண்டது. இந்த சூழலில், செல்வப்பெருந்தகைக்கு மாற்றாக மாணிக்கம் தாகூர் எம்பி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Related Post

Latest News