சென்னையில் நிர்வாகக் காரணங்களுக்காக 5 காவல் நிலையங்களின் ஆய்வாளர்களைக் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி மாநகர காவல் ஆணையர் அபின் தினேஷ் மோதக் இன்று அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் புதிய ஆட்சி அமைந்ததைத் தொடர்ந்து, பல்வேறு துறைகளில் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, சென்னை பெருநகர காவல் துறையிலும் தற்போது அதிரடி நடவடிக்கை பாய்ந்துள்ளது.
உடனடியாகப் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ள 5 காவல் ஆய்வாளர்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
ரமேஷ் – ஓட்டேரி (சட்டம் – ஒழுங்கு)
கிருபாநிதி – மதுரவாயல் (குற்றப்பிரிவு)
புஷ்பராஜ் – மீனம்பாக்கம் (சட்டம் – ஒழுங்கு)
காதர் மீரா – மாதவரம் (சட்டம் – ஒழுங்கு)
கண்ணகி – வானகரம் (சட்டம் – ஒழுங்கு)
இந்த திடீர் அதிரடி மாற்றம் சென்னை காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
