வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 3,000 கேஸ் சிலிண்டர்கள் : வெடித்துச் சிதறும் அபாயம்

மகாராஷ்டிர மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகக் கொட்டித் தீர்க்கும் கனமழையால் பல பகுதிகள் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கின்றன. இங்குள்ள பாதாளகங்கா பகுதியில் ‘இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்’ நிறுவனத்தின் எல்.பி.ஜி சிலிண்டர் நிரப்பும் ஆலை இயங்கி வருகிறது.

தொடர் மழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் இந்த ஆலையின் பாதுகாப்புச் சுவர் திடீரென இடிந்து விழுந்தது. அப்போது அங்கிருந்த சுமார் 3,000-க்கும் மேற்பட்ட கேஸ் சிலிண்டர்கள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டது.

ஆயிரக்கணக்கான சிலிண்டர்கள் வெள்ளத்தில் மிதந்து செல்வதைப் பார்த்த அப்பகுதி மக்கள், வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

மாவட்ட ஆட்சியரின் அவசர எச்சரிக்கை

இந்த விபத்து குறித்து ராய்காட் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

“வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சிலிண்டர்களில் பலவற்றில் கேஸ் நிரப்பப்பட்டிருக்க வாய்ப்புள்ளது. ஆற்றில் மிதந்து வரும் சிலிண்டர்களை பொதுமக்கள் யாரும் பயன்படுத்த வேண்டாம். இந்த சிலிண்டர்களை இயக்குவது அல்லது திறக்க முயற்சிப்பது கடுமையான விபத்துகளுக்கு வழிவகுக்கலாம்” என எச்சரிக்கப்பட்டுள்ளது.

Related Post

Latest News