மீண்டும் ரீ-ரிலீஸ் ஆகிறது மாதவனின் ‘ரன்’ : தேதி அறிவிப்பு

இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில், மாதவன் நடிப்பில் கடந்த 2002-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘ரன்’. ஸ்ரீசூர்யா மூவிஸ் தயாரித்த இப்படத்தில் மீரா ஜாஸ்மின், விவேக், ரகுவரன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். சென்னையை பின்னணியாகக் கொண்டு, காதல் மற்றும் ஆக்ஷன் கலந்த விறுவிறுப்பான திரைக்கதையுடன் உருவான இத்திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

‘ரன்’ திரைப்படத்தின் மிகப்பெரிய பலமே மெலடி கிங் வித்யாசாகரின் பாடல்களும், பின்னணி இசையும்தான். இப்படத்தில் இடம்பெற்ற அனைத்துப் பாடல்களுமே பட்டிதொட்டியெங்கும் ஹிட் அடித்தன. இந்நிலையில், ‘ரன்’ திரைப்படம் மீண்டும் ரீ-ரிலீஸ் ஆகிறது.

தமிழ் திரையுலகில் கடந்த சில மாதங்களாகவே, முன்னணி நட்சத்திரங்களின் கிளாசிக் சூப்பர்ஹிட் திரைப்படங்களை டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் புதுப்பித்து, மீண்டும் திரையரங்குகளில் வெளியாகி வருகிறது. ஏற்கனவே ரஜினிகாந்தின் ‘பாட்ஷா’, கமல்ஹாசனின் ‘வேட்டையாடு விளையாடு’, விஜய்யின் ‘சச்சின்’, சூர்யாவின் ‘வாரணம் ஆயிரம்’ போன்ற படங்கள் மறுவெளியீட்டில் நல்ல வசூலைக் குவித்தன.

அந்த வரிசையில், சாக்லேட் பாய் மாதவன் நடிப்பில் வெளியாகி பாக்ஸ் ஆபீஸை மிரட்டிய ‘ரன்’ (Run) திரைப்படம், புத்தம் புதிய பொலிவுடன் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகத் தயாராகியுள்ளது. அதன்படி, வரும் ஜூலை 10-ஆம் தேதி ‘ரன்’ திரைப்படம் 4K டிஜிட்டல் தரத்தில் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.

Related Post

Latest News