சோதனைக் காலத்திலும் உறுதியுடன் நின்ற கூட்டணிக்கு நன்றி தெரிவித்த மு.க ஸ்டாலின்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருந்த தவெக, பெரும்பான்மை இல்லாததால் ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த சூழலில் காங்கிரஸ், CPI, CPIM, விசிக, IUML கட்சிகள் ஆதரவளித்ததால் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைக்க 120 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கிடைத்துள்ளது.

இந்நிலையில். திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவு ஒன்றில் கூறியிருப்பதாவது : கூட்டணியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் நன்றி தெரிவிக்க அண்ணா அறிவாலயம் வரவில்லை. ஒரே நாளில் தி.மு.க.வுடனான உறவை முறித்துக்கொண்டு காங்கிரஸ் கட்சி சென்றது.

இந்நேரத்தில் மிக முக்கியமான சோதனைக் காலத்தில் உறுதியுடன் உடன் நின்ற தோழமை இயக்கத் தலைவர்கள் பேராசிரியர் அய்யா காதர் மொகிதீன், அண்ணன் வைகோ, சகோதரி பிரேமலதா விஜயகாந்த், பேராசிரியர் ஜவாஹிருல்லா, சகோதரர்கள் ஈஸ்வரன், தமிமுன் அன்சாரி உள்ளிட்ட அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களின் உறுதிக்கு எத்தகைய நன்றியும் பாராட்டும் பொருந்தும் என கூறியுள்ளார்.

Latest News