நாட்டின் 3வது முப்படை தலைமை தளபதியாக என்.எஸ். ராஜா சுப்ரமணி நியமனம்

மத்திய அரசு புதிய முப்படை தலைமை தளபதியை அறிவித்துள்ளது. அதன்படி, நாட்டின் 3வது முப்படை தலைமை தளபதியாக என்.எஸ். ராஜா சுப்ரமணி நியமிக்கப்பட்டுள்ளார்.

ஓய்வு பெற்ற லெப்டினன்ட் ஜெனரலான ராஜா சுப்ரமணி, இந்திய ராணுவத்தில் சுமார் 40 ஆண்டுகள் சேவையாற்றிய அனுபவம் கொண்டவர். 1985ஆம் ஆண்டு கார்வால் ரைபிள்ஸ் படையில் தனது சேவையை தொடங்கிய அவர், பின்னர் பல முக்கிய பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார். ராணுவ துணை தளபதி மற்றும் லக்னோவில் உள்ள மத்திய ராணுவ கட்டளை தளபதி உள்ளிட்ட பொறுப்புகளையும் வகித்துள்ளார்.

முப்படை தலைமை தளபதி பதவி, ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகிய மூன்று படைகளையும் ஒருங்கிணைத்து செயல்படச் செய்யும் முக்கிய பொறுப்பாகும். போர் காலங்கள் மற்றும் அவசர சூழ்நிலைகளில் விரைவான முடிவுகளை எடுக்க இந்த பதவி உருவாக்கப்பட்டது.

Latest News