சூர்யா நடித்த ‘கருப்பு’ திரைப்படம் வெளியான மூன்று நாட்களிலேயே உலகளவில் ரூ.120 கோடிக்கும் அதிக வசூலை பெற்றுள்ளது. ரசிகர்களின் ஆதரவால் படம் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடி வருகிறது.
ஆர். ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியாகியுள்ள ‘கருப்பு’ திரைப்படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது. கடந்த 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்த படம், தொடக்க நாளிலிருந்தே நல்ல வசூலை செய்து வருகிறது.
இப்படத்தில் திரிஷா, சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, நட்டி நட்ராஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சாய் அபயங்கர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், ‘கருப்பு’ திரைப்படத்தின் புதிய வசூல் விவரங்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, படம் வெளியான முதல் மூன்று நாட்களிலேயே உலகளவில் ரூ.120 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது.
இந்திய அளவில் மட்டும் சுமார் ரூ.78 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. படத்திற்கு நல்ல வரவேற்பு இருப்பதால் வரும் நாட்களிலும் படத்தின் வசூல் மேலும் உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
