டைட்டில் கார்டில் முதலமைச்சர் விஜய்க்கு நன்றி தெரிவித்த ‘கருப்பு’ படக்குழு

ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில், சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘கருப்பு’ திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது இந்தப் படத்தில் கதாநாயகியாக திரிஷா நடித்துள்ளார்.

நேற்று (மே 14)வெளியாக வேண்டிய ‘கருப்பு’ திரைப்படம், நிதி மற்றும் பைனான்ஸ் தொடர்பான சிக்கல்களால் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் தயாரிப்பு தரப்பில் ஏற்பட்ட பிரச்சினைகள் சரிசெய்யப்பட்டதையடுத்து, படம் இன்று வெளியானது.

இந்நிலையில், படத்தின் ஆரம்பத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு “Special Thanks” தெரிவிக்கும் கார்டு திரையிடப்பட்டது. அந்த நன்றி அட்டையில், நேருக்கு நேர் படத்தில் சூர்யா மற்றும் விஜய் இணைந்து நடித்த பழைய காட்சிகளும் இடம்பெற்றிருந்தன. இந்த காட்சி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது.

Related Post

Latest News