கன்னியாகுமரி பெண் தற்கொலை வழக்கு: தலைமறைவாக இருந்த த.வெ.க. பிரமுகர் கைது

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பான வழக்கில், த.வெ.க. பிரமுகர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் மகேஷ் இவர் வெளிநாட்டில் மின்சார தொழிலாளராக பணியாற்றி வருகிறார். அவரது மனைவி அனிஷா (33) தனியார் பள்ளி அலுவலகத்தில் பணியாற்றி வந்துள்ளார். கடந்த ஜூலை 12-ஆம் தேதி, அனிஷா, தன் கணவருக்கு “இது நான் அவன் மேல விருப்பப்பட்டு செய்தது கிடையாது. என்னை அவன் வாழ விடமாட்டான்.” என்று வீடியோ மூலம் தகவலை அனுப்பிவிட்டு தூக்கில் தொங்கி உயிரை மாய்த்துக் கொண்டார்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் தமிழ்நாடு வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த சங்கர் என்ற நபரை தேடி வந்தனர். இவர், சென்னை பல்லாவரம் பகுதியில் நண்பரின் வீட்டில் தங்கியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் அங்கு சென்று அவரை கைது செய்தனர். பின்னர் அவரை கன்னியாகுமரிக்கு அழைத்து வந்து பத்மநாபபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

Related Post

Latest News