ஜனநாயகன் லீக் விவகாரம் : மேலும் ஒருவர் கைது

இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள “ஜனநாயகன்” திரைப்படம் சென்சார் பிரச்சனை காரணமாக ரிலீஸ் ஆவதில் பிரச்சனை ஏற்பட்டது. இந்த சூழலில் முழு படமும் இணையத்தில் கசிந்தது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் குறித்து தயாரிப்பு நிறுவனம் அளித்த புகாரின் பேரில் சைபர் குற்றப்பிரிவு போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். இது தொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக பத்தாவது நபராக மேலும் ஒருவரை சைபர் கிரைம் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

Related Post

Latest News