ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் தேதி இதுவா? வெளியான முக்கிய தகவல்

நடிகரும் தவெக தலைவருமான விஜய் நடித்துள்ள திரைப்படம் ஜனநாயகன். ஹெச்.வினோத் இயக்கியுள்ள இப்படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பாபி தியோல், பிரகாஷ் ராஜ், பிரியாமணி உள்பட பலர் நடித்துள்ளனர்.

ஜனவரி 9ம் தேதி வெளியாகவேண்டிய இப்படம் சென்சார் பிரச்சனை காரணமாக வெளியாகவில்லை. இதையடுத்து இப்படம் சட்டவிரோதமாக இணையத்தில் வெளியானது.

இந்நிலையில் இப்படத்துக்கு விரைவில் தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்பட இருக்கிறது. தமிழ்நாடு தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு மே 7-ம் தேதி படத்தை வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Related Post

Latest News