ஜனநாயகன் படத்திற்கு ஒரு டிக்கெட்டின் விலை 2500 ரூபாயா? புலம்பும் ரசிகர்கள்

எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் ஜனநாயகன். விஜய்யின் கடைசி படம் என்பதால் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருந்தது. கடந்த ஜனவரி மாதம் வெளியாகவேண்டிய இப்படம் சென்சார் பிரச்சனை காரணமாக படம் வெளியாகவில்லை.

பின்னர் ஒருவழியாக ‘ஜனநாயகன்’ படத்திற்கு ஏ தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து, இப்படம் வருகின்ற ஜூலை 23ம் தேதி வெளியாகிறது. விஜய்யின் கடைசி படம் என்பதால் படத்தை எப்படியாவது பார்த்துவிட வேண்டும் என ரசிகர்கள் தயாரக உள்ளனர். முன்பதிவு படுவேகமாக நடைபெற்று வருகிறது.

இந்த சூழலில், ஜனநாயகன் பட டிக்கெட் 2 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவது மக்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. தமிழகத்தில் அரசு நிர்ணயித்த விலையை விட ஒரு ரூபாய் கூட அதிகமாக விற்பனை செய்யவே கூடாது என்று தியேட்டர் உரிமையாளர்களுக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறதாம். ஆனால் பெங்களூரில் அப்படி இல்லை.

கர்நாடக மாநிலம் பெங்களூரில் ஜனநாயகன் முதல் நாள் முதல் காட்சி 6 மணிக்கு துவங்குகிறது. ஒரு டிக்கெட் ரூ.1200 முதல் ரூ. 2,500க்கு விற்பனை செய்யப்படுகிறது. விஜய்க்கு கடைசி படம் என்பதால் ரசிகர்கள் பணத்தை பார்க்காமல் டிக்கெட் வாங்கி வருகிறார்கள்.

Related Post

Latest News