பயணிகள் கவனத்திற்கு., இனி ஸ்கிரீன்ஷாட் காட்டினால் அபராதம்! ரெயில்வே அதிரடி கட்டுப்பாடு!

இந்திய ரயில்வேயில், முன்பதிவு இல்லாத மற்றும் உள்ளூர் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் முறையில் பல்வேறு அதிரடி கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளது. இனி மொபைலில் டிக்கெட்டின் ஸ்கிரீன்ஷாட் அல்லது புகைப்படத்தைக் காட்டினால் அது செல்லாது என்றும், அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் பயணத்தின் போது டிக்கெட் பரிசோதனை செய்யும் போது, பயணிகள் பலர் தங்களின் மொபைலில் உள்ள டிக்கெட் ஸ்கிரீன்ஷாட்கள், PDF , புகைப்படங்கள் அல்லது வாட்ஸ்அப் மூலம் பகிரப்பட்ட டிக்கெட் விவரங்களைக் காட்டுவார்கள். இனி இத்தகைய நகல்கள் எதுவும் செல்லுபடியாகாது என்று ரயில்வே தெளிவுபடுத்தியுள்ளது. அசல் மொபைல் செயலியைத் திறந்து, அதற்குள் இருக்கும் டிஜிட்டல் டிக்கெட்டைக் காட்டினால் மட்டுமே அது முறையான பயண ஆவணமாக ஏற்றுக்கொள்ளப்படும்.

புதிய டிஜிட்டல் டிக்கெட் விதிமுறைகள்

எந்த மொபைல் எண் மற்றும் சாதனத்தைப் பயன்படுத்தி ‘ரயில் ஒன்’ செயலியில் டிக்கெட் புக் செய்யப்பட்டதோ, அதே மொபைலில் தான் அசல் டிக்கெட்டைக் காண்பிக்க வேண்டும். ரயில் புறப்படுவதற்கு முன்பே டிக்கெட் எடுக்கப்பட்டிருக்க வேண்டும். ரயில் புறப்பட்ட பிறகு எடுக்கப்படும் டிஜிட்டல் டிக்கெட்டுகள் செல்லாததாகக் கருதப்படும்.

ரயில் நிலையத்திற்குள் நுழைந்த பிறகோ அல்லது தண்டவாளத்திற்கு மிக அருகிலோ இருந்து கொண்டு டிஜிட்டல் முறையில் அன்ரிசர்வ்டு டிக்கெட்டுகளை புக் செய்ய முடியாது. நிலையத்தின் குறிப்பிட்ட எல்லைக்கு வெளியில் இருந்து மட்டுமே ஆன்லைன் புக்கிங் வேலை செய்யும்.

பிரிண்ட் அவுட் தேவையா?

“நீங்கள் ஆன்லைனில் டிஜிட்டல் டிக்கெட் எடுத்து, அதற்குப் பேப்பர் பிரிண்ட் அவுட் எதுவும் எடுக்கவில்லை என்றால், நேரடியாக உங்களின் ‘ரயில் ஒன்’ செயலியில் உள்ள டிக்கெட்டை மட்டும் காட்டினால் போதும். அதற்குத் தனியாக பிரிண்ட் அவுட் தேவையில்லை.

Related Post

Latest News