‘போலி வாக்குகள் வந்தது எப்படி? மறு வாக்கு பதிவு வேண்டும்’ : வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் பார் கவுன்சில் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் 47 வாக்குகள் வித்தியாசம் ஏற்பட்டதால் போலி வாக்குகள் சேர்க்கப்பட்டதாக வழக்கறிஞர்கள் குற்றச்சாட்டு எழுப்பி போராட்டம் நடத்தினர். ஆனால் இது இன்னும் விசாரணை செய்ய வேண்டிய குற்றச்சாட்டாகவே உள்ளது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலுக்கான பொதுத் தேர்தல் மார்ச்-30-2026 அன்று நடைபெற்றது. இதில் பார் கவுன்சிலில் 23 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஆகும். இந்த தேர்தல் உச்சநீதிமன்றத்தால் நியாமிக்கப்பட்ட கண்காணிப்பு குழுவின் கீழ் நடத்தப்பட்டது. தேர்தலில் கியூ ஆர் கோடு முறை அறிமுகப்படுத்தப்பட்டது. தேர்தலுக்கான அதிகாரியாக நீதிபதி கே.என் பாஷா நியாமிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் பார் கவுன்சில் தேர்தலில் வாக்களித்தவர்களின் வாக்குகள் தற்போது எண்ணும் பணி நடைபெற்று கொண்டிருக்கிறது. இதில் இரட்டை டிஜிட்டல் கொண்ட வாக்கு சீட்டுகள் 47 போலியாக பதிவாகி உள்ளதை அறிந்த வழக்கறிஞர்கள், இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும், மறு வாக்கு பதிவு நடத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் நுழைவுவாயில் கடந்த 21-04-2026 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து 24-04-2026 அன்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் உயர்நீதிமன்றம் வழக்கறிஞர்கள் ஆர்.ராஜேஷ், தாமஸ் பர்னபாஸ் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இதில் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் செயலாளர் கிருஷ்ணன குமார், கு.பாரதி, அங்காள பரமேஸ்வரி, செழியன், ஷாலியா பேகம் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினார்கள்.

அப்போது பேசுகையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் அதன் வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் திருப்பூர் வாக்கு பெட்டியில் மட்டும் 1052 வாக்குகள் பதிவாகியுள்ளது என்று தெரிவித்தனர். அதை மறுநாள் எண்ணும்போது 1099 வாக்குகள் என்று கூறுகின்றனர்.

பின்னர் அதை பார்க்கும்போது இரட்டை டிஜிட்டல் கொண்ட 47 வாக்குகள் போலியாக பதிவாகி உள்ளது. கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உடனே எண்ணிக்கையை நிறுத்தும்படியும், நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குரல் கொடுத்தோம் ஆனால் அதை கேட்காமல் தொடர்ந்து எண்ணப்பட்டது.

இந்த தேர்தலுக்காக ஒவ்வொரு வேட்பாளரும் ரூ.1 லட்சத்தி 25 ஆயிரம் வைப்பு தொகை என மொத்தம்1கோடியே 88 லட்சத்தி 75 ஆயிரம் செலவு செய்து இருக்கின்றோம். அதுமட்டுமின்றி அகில இந்திய பார் கவுன்சில் மூலமாகவும் பணம் செலவு செய்யப்படு, அதிகாரிகளை நியமித்து இந்த தேர்தல் நடைபெற்றது. அவ்வாறு இருக்கும்போது திருப்பூர் வாக்கு பெட்டியில் 47 போலி வாக்குகள் வந்தது எப்படி? இந்த ஒரு மாவட்டத்தில் 47 என்றால் இன்னும் அடுத்து எவ்வளவு என்பது தெரியவில்லை.

கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் இருந்த கவுண்டிங் ஆஃப் இன்னும் அமைக்கவில்லை.டெல்லியில் இரண்டு தினங்களுக்கு முன் போலியாக வாக்கு சீட்டு தயாரித்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆகவே போலியாக பதிவாகி உள்ள இரட்டை டிஜிட்டல் கொண்ட 47 வாக்குகள் எப்படி பதிவாகின, அதற்கு யார் காரணம் என்பதை தெரிவிக்க வேண்டும். அவர்களை கைது செய்யவேண்டும்.

மறு வாக்கு பதிவு நடத்த வேண்டும். இல்லையென்றால், இந்த கூட்டத்தை விட தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்ட நீதிமன்றங்கள் அதன் கீழமை நீதிமன்றம் அருகில் மிக பெரிய ஆர்ப்பாட்டம் நடைபெறும் அந்த நிலைக்கு கொண்டு செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம். என்றனர்.

Latest News