5 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு., கொளுத்தும் வெயிலுக்கு கொஞ்சம் ரெஸ்ட்

தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூரில் நாளை மறுநாள் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, நாமக்கல், கரூர், திண்டுக்கல், தேனி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை மறுநாள் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

கோவை, திருப்பூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் வரும் 25ம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளது.

கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, ஈரோடு, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் வரம் 26ம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related Post

Latest News