தலைவருமான மு.க. ஸ்டாலின் இல்லத்தில் சென்று சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போது, மு.க.ஸ்டாலின் அன்புடன் விஜயை வரவேற்று சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். புதிய ஆட்சிக்கு தனது நல்வாழ்த்துகளை தெரிவித்ததுடன், இருவரும் சில நிமிடங்கள் கலந்துரையாடியதாக கூறப்படுகிறது.
இந்த சந்திப்பு குறித்து , திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
“மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள திரு. விஜய் அவர்கள் அரசியல் நாகரிகத்துடன் என்னைச் சந்தித்து வாழ்த்து பெற்றார்.அவருக்கு என் அன்புநிறை வாழ்த்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கினேன்.”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
