தமிழக அரசு மற்றும் சில அதிகாரிகள் குறித்து தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டதாக கூறி, கடந்த கால வழக்குகளை அடிப்படையாகக் கொண்டு சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டது. இதனை எதிர்த்து அவர் உச்ச நீதிமன்றத்தை நாடிய நிலையில், தேவையான ஆதாரங்கள் தெளிவாக இல்லை எனக் கருதிய நீதிமன்றம், அவருக்கு ஜாமீன் வழங்கி விடுதலை செய்ய உத்தரவிட்டது.
இதையும் படிங்க : ஒரே நாள் இரவில் 100-க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது : சென்னையில் நடந்த அதிரடி
இந்நிலையில், சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு வெளியிட்டுள்ள உத்தரவில், ‘சவுக்கு சங்கர் தடுப்புக் காவலில் (குண்டர் சட்டம்) வைக்கப்பட்டதற்கான காரணங்கள் குறித்த விவரங்கள், ஆலோசனை வாரியத்திடம் சமர்ப்பிக்கப்பட்டன.
இது குறித்து ஆய்வு செய்த ஆலோசனை வாரியம், சவுக்கு சங்கரை தடுப்புக் காவலில் வைப்பதற்கு போதுமான காரணம் இல்லை என்று அறிவித்தது. இந்த உத்தரவை அடுத்து சவுக்கு சங்கர் விரைவில் விடுவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
