கடந்த 2022-ஆம் ஆண்டு விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் வெளியான ‘கட்டா குஸ்தி’ படம் பேசிய கருத்துகளும், சுவாரஸ்யமான திரைக்கதையும் பெரிதும் பாராட்டப்பட்டது. தற்போது அந்தக் கதையின் தொடர்ச்சியாக இரண்டாம் பாகத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் செல்லா அய்யாவு.
விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் வெளியாகியுள்ள ‘கட்டா குஸ்தி 2’ திரைப்படம் முதல் வார இறுதியில் பாக்ஸ் ஆபிஸில் வலுவான வரவேற்பைப் பெற்றுள்ளது. குடும்ப பொழுதுபோக்கு, நகைச்சுவை மற்றும் விளையாட்டு பின்னணியை இணைத்த இந்த படம், மூன்று நாட்களில் உலகளவில் ரூ.18 கோடிக்கும் அதிகமான வசூல் செய்துள்ளது.
திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்த நேர்மறை விமர்சனங்கள் காரணமாக, மூன்றாவது நாளான ஞாயிற்றுக்கிழமை திரையரங்குகளில் பார்வையாளர்கள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்தது. 2022-ஆம் ஆண்டு வெளியான ‘கட்டா குஸ்தி’ திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில், அதன் தொடர்ச்சியாக உருவான இந்த இரண்டாம் பாகமும் அதே உற்சாகத்தைத் தொடர்ந்துள்ளது.
