இனி செய்தித்தாள்களில் உணவுகளை வழங்கக்கூடாது – FSSAI எச்சரிக்கை

உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் ஆணையம் (FSSAI) செய்தித்தாள்களை உணவு பொருட்களை சுற்றி வழங்குவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என உணவு வணிகர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

சமீபத்தில் மும்பையில் ஒரு வடை பாவ் வியாபாரி செய்தித்தாளில் உணவை சுற்றி வழங்கிய சம்பவத்தையடுத்து, FSSAI மற்றும் மும்பை மாநகராட்சி இணைந்து ஆய்வு மேற்கொண்டது. இதனைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு தெரு உணவுக் கடைகள், உணவகங்கள், கிளவுட் கிச்சன்கள், கேட்டரிங் சேவைகள் உள்ளிட்ட அனைத்து உணவு வணிகங்களுக்கும் பொருந்தும். பொதுமக்களும் செய்தித்தாள்களில் வழங்கப்படும் உணவுகளை வாங்காமல் கவனமாக இருக்க வேண்டும் என FSSAI கேட்டுக்கொண்டுள்ளது.

செய்தித்தாள்களில் பயன்படுத்தப்படும் அச்சு மை உடலுக்கு தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள், ஈயம் போன்ற கனிம உலோகங்கள் உணவுடன் கலந்து உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

Related Post

Latest News