தனியார் பேருந்தை தொடர்ந்து விமான கட்டணமும் அதிரடி உயர்வு

தமிழகத்தில் நாளை நடைபெறும் தேர்தலை முன்னிட்டு மக்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்து வருகின்றனர். ஏற்கனவே தனியார் பேருந்து கட்டணம் உயர்ந்த நிலையில் தற்போது விமானக் கட்டணமும் உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நாளை நடைபெறுகிறது. வேலைக்காக வெளிநாடுகளில் தங்கியிருக்கும் தமிழர்கள் கூட தங்கள் வாக்கை பதிவு செய்யும் நோக்கில் தமிழகம் திரும்பி வருகின்றனர். அதேபோல், சென்னை போன்ற பெருநகரங்களில் வசிக்கும் மக்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்து வருகின்றனர்.

பெரும்பாலான ரெயில்களில் டிக்கெட்டுகள் முன்கூட்டியே முடிந்துவிட்டதால், பலர் மாற்று வழியாக விமானப் பயணத்தைத் தேர்வு செய்துள்ளனர்.

இந்நிலையில், சென்னை முதல் தென்மாவட்டங்களுக்கு செல்லும் விமானங்களில் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது. உதாரணமாக, சென்னை–தூத்துக்குடி வழித்தடத்தில் வழக்கமாக ரூ.5,354 இருந்த கட்டணம் தற்போது ரூ.17,527 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், சென்னை–மதுரை, சென்னை–திருச்சி, சென்னை–கோவை ஆகிய பாதைகளிலும் கட்டண உயர்வு கணிசமாக உள்ளது.

Latest News