தமிழகத்தில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) அரசில் புதிதாகப் பதவியேற்றுள்ள அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வரும் நிலையில், முக்கிய அமைச்சரவை மாற்றமாக நிதியமைச்சராக இருந்த கே. ஏ. செங்கோட்டையன் அவர்களின் இலாகா மாற்றப்பட்டுள்ளது.
நிதித் துறை அமைச்சராக இருந்த செங்கோட்டையன் வருவாய், பேரிடர் மேலாண்மை துறை அமைச்சராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
புதிய அமைச்சர்களுக்கான இலாகா ஒதுக்கீடு மற்றும் இந்த முக்கிய அமைச்சரவை மாற்றத்திற்கான ஒப்புதலை மாண்புமிகு தமிழக ஆளுநர் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
